IPL தொடரின் அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு? முழு விபரம் இதோ!
2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரின் அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பரிசுத்தொகை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
IPL 2024
2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று 26 ஆம் திகதியுடன் முடிவு பெற்றது.
இந்த போட்டியில் இறுதி அத்தியாயத்திற்கு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் தகுதி பெற்றது.
அதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதின.
அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சேம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்த அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை
- 1ம் இடத்தைப் பிடித்த கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாய்.
-
2ம் இடத்தைப் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடி.
-
3ம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 7 கோடி ரூபாய்.
-
எலிமினேட்டர் போட்டியில் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 6.5 கோடி.
-
அதிக ஓட்டத்தை பெற்று ஆரஞ்சு தொப்பியை வென்ற பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு ரூ. 10 லட்சம்.
-
ஊதா நிற தொப்பியை பெற்ற ஹர்ஷல் படேலுக்கு 10 லட்சம் ரூபாய்.
-
வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்ற ஐதராபாத் அணியின் இளம் வீரர் நிதிஷ் ரெட்டிக்கு 20 லட்சம் ரூபாய்.
-
488 ரன்கள் அடித்து 18 விக்கெட்டுகள் சாய்த்து தொடர்நாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் சுனில் நரேனுக்கு ரூ.12 லட்சம்.
-
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க்கிற்கு ரூ.10 லட்சம்.
-
அதிக சிக்சர் அடித்த வீரரான அபிஷேக் சர்மாவுக்கு ரூ.10 லட்சம்.
-
அதிக பவுண்டரி அடித்த டிராவிஸ் ஹெட்டுக்கும் ரூ.10 லட்சம்.
-
அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரராக தேர்வு செய்யப்பட்ட ஜேக் பிரேசர்-மெக்குர்க்கும் ரூ. 10 லட்சம்.
-
கொல்கத்தா அணியின் சிறந்த கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்கு ரூ. 10 லட்சம்.
-
இறுதியாக பிளே விருதை வென்ற ஐதராபாத் அணிக்கு ரூ. 10 லட்சம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |