நான் என்ன சாப்பிடறனோ அது தான் எல்லாருக்கும்.. கேப்டன் விஜயகாந்த் வயிறார சாப்பாடு போட என்ன காரணம்?
கேப்டன் விஜயகாந்த் எல்லாருக்கும் பாகுபாடு இல்லாமல் வயிறார சாப்பாடு போட என்ன காரணம் என்பதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் நேற்று காலை காலமானார்.
நேற்று, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு, ரசிகர்கள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் விட்டு அழுதனர்.
இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்பிறகு மாலையில் கோயம்பேடு கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
சாப்பாடு போட என்ன காரணம்?
விஜயகாந்தின் தேமுதிக அலுவலகத்திற்கு எப்போது சென்றாலும் 300,400 பேர் சாப்பிடக் கூடிய அளவிற்கு சாப்பாடு இருக்கும். சாப்பிட வைத்து விட்டு தான் அவர் அனுப்பி வைப்பார். ஷூட்டிங்க் நடக்கும் இடத்தில் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சாப்பிட்டாச்சா என்ற கேள்வியை தவறாமல் கேட்டு விடுவார்.
அவருக்கு இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்க்கும் போது, அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தது தெரியவந்தது.
விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் நடிக்கும் சமயங்களில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஹீரோயின்கள் சாப்பிட்டு முடித்து விட்டால் உடனே ஷாட் ரெடி என்று கூறி விஜயகாந்தை உடனே அழைத்து விடுவர். இவரும், சாப்பாட்டை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விடுவாராம்.
When #Vijayakanth democratised food in the film industry ❤️ pic.twitter.com/p6UGgn7nH7
— Rajasekar (@sekartweets) December 28, 2023
இந்த எண்ணங்கள் மனதிற்கு நெருடலை தந்ததால் தான் நல்ல நிலைக்கு வந்த பின்னர் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுத்துள்ளார். நான் என்ன சாப்பிடறனோ அது தான் எல்லாரும் சாப்பிடணும் என்று கூறியவர். இது தான் அவர், அனைவருக்கும் வயிறார சாப்பாடு போட என்ன காரணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |