கடல் நீரின் உப்பின் அளவு என்ன?
பொதுவாக கடல் நீரின் உப்பின் அளவு 35கி/லி என்று கணக்கிடப்படும்.இது அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது.
உதாரணத்துக்கு சாக்கடல் வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள கடல்.
இங்கு அதிக வெப்பத்தால் அதிகளவு நீர் ஆவியாதல் & ஆறுகள், மழைகள் மூலம் குறைந்த அளவு நீர் சேர்க்கை முதலிய காரணங்களால் இக்கடல் அதிக உப்புத் தன்மையுடன் காணப்படும்.
இதன் சராசரி உப்பு 40–45கி/லி.
இதே அண்டார்டிகா, ஆர்க்டிக் போன்ற கடல் பகுதிகளில் ஆறுகள் மட்டுமன்றி பனிக்கட்டிகள் உருகுவதால் உருவாகும் நன்னீரும் கடலில் கலக்கிறது.
இதனால் பனிப்பிரதேசங்களில் அமைந்துள்ள கடல்களின் உவர்ப்புத் தன்மை குறைவாக காணப்படும்.
இங்கு 1 லி. கடல் நீரில் 30–35கி உப்பு & அதற்கும் கீழான அளவுகளில் கூட காணப்படும்.