தமிழகத்தின் மாநில விலங்கு எது தெரியுமா? முழு விவரங்கள்
தமிழகத்தின் மாநில விலங்கு எது என்ற தகவலை நாம் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாநில விலங்கு
இந்தியாவின் தேசிய விலங்கு புலி (Panthera Tigris) என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தமிழகத்தின் மாநில விலங்கு எது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

பழங்கால நாணயங்களுக்கு ரூ.2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடி.., உயிரை மாய்த்துக் கொண்ட முதியவர்
இந்தியாவின் தேசிய விலங்கானது ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) என்றும் அழைக்கப்படுகிறது. இது, அழகு, வலிமை மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றிற்கான பெருமையை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான விலங்காகவும் உள்ளது. தமிழகத்தின் மாநில விலங்காக நீலகிரி வரையாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நீலகிரி வரையாடுகள் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. குறிப்பாக இவை நீலகிரி மற்றும் இரவிகுளம் தேசிய பூங்காவில் அதிகமாக காணப்படுகின்றன.
அந்தவகையில் தற்போது 3000க்கும் மேற்பட்ட நீலகிரி வரையாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது, 80 முதல் 100 கிலோ எடை வரை உள்ளது.
இதன் உயரமானது , 100 செ.மீ வரை காணப்படுகின்றன. அதேபோல, ஆண் வரையாடுகளின் கொம்புகள் 40 செ.மீ. வரை வளருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |