பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் சட்டம்: புலம்பெயர்வோரின் நிலை என்ன?
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் சட்டம் புலம்பெயரும் திட்டத்தில் இருப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் சட்டம்
சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரைக் கட்டுப்படுத்துவதற்கான அதிரடி முயற்சிகளை பிரித்தானிய அரசு துவங்கியுள்ளது.
அதன்படி, சட்ட விரோத புலம்பெயர்வோரை கைது செய்தல், நாடுகடத்துதல், மீண்டும் அவர்கள் பிரித்தானியாவுக்கு வர, புகலிடம் மற்றும் குடியுரிமை கோர தடை விதித்தல் ஆகியவற்றை சாத்தியமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர பிரித்தானியா தீவிரமாக முயன்றுவருகிறது.
Credit: Peter Jordan
அச்சத்தை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் முயற்சி
பிரித்தானியா கொண்டுவர இருக்கும் சட்டம் பிரித்தானியாவுக்குள் நுழையும் திட்டத்தில் பெரும் செலவு செய்து பிரான்சில் காத்திருப்போருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக பிரெஞ்சுக் கடற்கரை ஒன்றின் அருகே காத்திருந்த Khiyal Gul (41) என்பவர், வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தான் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழையப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
Credit: Getty
ஆனால், பிரித்தானிய பிரதமரின் புதிய சட்டம் குறித்து அறிந்ததும், பிரித்தானியாவுக்குள் நுழையும் தன் திட்டத்தை கைவிட்டுவிட்டார் Khiyal.
இப்போதைக்கு பாரீஸிலேயே தங்கியிருக்கப்போகிறேன், அடுத்து என்ன செய்வதென்று இனிதான் யோசிக்கவேண்டும் என்கிறார் அவர்.
Credit: Ben Ellery
மற்றவர்களின் திட்டம்
அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து ஒரு கூட்டம் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக வந்து காத்திருக்கிறது. ஒரு நல்ல வருவாய் தரும் வேலைக்காக தாங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கிறார் Gurpreet Singh (27) என்பவர்.
பஞ்சாபிலிருந்து செர்பியா வழியாக பிரான்சுக்கு வந்துள்ள 20 சீக்கியர்களில் ஒருவரான Akashdeep Singh (21), தான் புதிய சட்டம் குறித்துக் கேள்விப்பட்டதாகவும், ஆனால், பிரான்சை வந்தடைவதற்காக 10,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
Credit: Peter Jordan
ஆக, திரும்பிச் செல்லும் திட்டம் அவர்களிடம் இல்லை. அவர்கள் ஒருவேளை பிரித்தானியாவுக்குள் நுழைந்து தலைமறைவாகக் கூடும்.
மொத்தத்தில், பிரித்தானியாவின் புதிய சட்டம் புலம்பெயர்வோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பதையே இந்த நபர்களின் செயல்கள் உறுதிசெய்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
Credit: Peter Jordan
Credit: Peter Jordan