மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
ஜீ தமிழ், சன் டிவி, விஜய் போன்ற தொலைக்காட்சியிலும் பல ஷோக்களில் கலந்து கொண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4-ல் கலக்கி வந்த தொகுப்பாளி அர்ச்சனா இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டிருந்தார். இது பல திரைபிரபலங்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, அதற்கான காரணங்களையும் விளக்கி தனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி அர்ச்சனாவின் நிலை குறித்து அவருடைய சகோதரி அனிதாவும், 14 வயது மகள் சாராவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அர்ச்சனாவின் மகளான சாரா வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவலில்,
“அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், அவர் இன்னமும் மயக்க நிலையிலேயே இருந்து வருவதாகவும், தனது தாயார் அர்ச்சனா விரைவில் சுயநினைவை பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்
.
மூளை அறுவை கிசிக்கைக்கு பின்னர் ஒருவாரத்திற்கு மருத்துவமனையில் கழிக்க வேண்டும், அதன் பின்னர் தான் வீட்டுக்கு திரும்புவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.