BMW கார் உள்பட 4 கார்கள், ரூ.50 கோடி கடன்.., நடிகர் கமல் ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு?
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு?
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு இடத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு ஏற்கனவே திமுக ஒதுக்கியிருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது வேட்புமனுவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
இதன்படி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையில் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், "2023-24-ஆம் நிதியாண்டில் கமல் ஹாசனின் வருவாய் ரூ.78.90 கோடி எனவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி என்றும்" குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அவருக்கு ரூ.49.67 கோடி கடன் இருப்பதாகவும், ரொக்கமாக கையில் ரூ.2.60 லட்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ் ஆகிய 4 கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |