காசநோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும், காற்றின் மூலம் பரவும் தீவிரத் தொற்றுநோயாகும்.
இது முக்கியமாக நுரையீரலைப் பாதித்தாலும், உடல் உறுப்புகளையும் பாதிக்கலாம்.
தொடர்ந்து இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, உடல் எடை குறைதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
அந்தவகையில், காசநோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?
லேசான காய்ச்சல் தொடர்ந்து வந்து போகும். குறிப்பாக மாலை நேரங்களில் காய்ச்சல் அதிகமாக காணப்படும்.
இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர் இருமலும் முக்கிய அறிகுறியாகும். ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருந்து பின்னர் சளியுடன் இருமல் ஏற்படும்.
பசியின்மை காரணமாக சாப்பிட விருப்பம் குறையும். வயிறு எப்போதும் நிரம்பிய உணர்வு இருக்கும்.
நன்றாக ஓய்வு எடுத்தாலும் உடல் சோர்வு மற்றும் பலவீனம் நீடித்தால் கவனம் அவசியம்.
எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை குறைவதும் கவலைக்குரியது.
மேலும், இரவு நேரங்களில் அதிகமாக வியர்வை சிந்துவது கூட காசநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |