இஷா அம்பானியின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகளும், தொழில்முனைவோருமான இஷா அம்பானி, தனது அழகு மற்றும் ஃபேஷன் அறிக்கைகளுக்காக தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளார்.
அவரது அழகின் ரகசியம்
ஒருமுறை இஷா அம்பானி வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது ஸ்டைல் மற்றும் அழகு ரகசியங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
வோக் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், சரியான கூந்தலைப் பெறுவதற்கான அவர் செய்த விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அம்பானியின் பெரிய திட்டம்.., ஆசியாவின் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.40,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம்
"பெரும்பாலான மக்கள் என்னை மெல்லிய, உலர்த்திய கூந்தலுடன் பார்ப்பது வழக்கம். ஆனால் என்னுடைய இயற்கையான கூந்தல் மிகவும் அடர்த்தியாகவும், சுருண்டதாகவும், கொஞ்சம் சிக்கலாகவும் இருக்கும்.
ஒரு சாதாரண நாளில், நீங்கள் என்னை பார்த்தால் என் கூந்தல் இப்படித்தான் இருக்கும். இருப்பினும் நான் எப்போதும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியாவில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். எண்ணெய் பசையுள்ள கூந்தல் கட்டுப்பாடில்லாமல் சுருண்டு போகும்.
அடர்த்தியான மற்றும் சுருண்டு போகும் கூந்தலை நாம் ஒருபோதும் கொண்டாடியதில்லை. உங்கள் தலைமுடி கட்டுக்கடங்காமல் இருக்க எப்போதும் எண்ணெய் தடவி சீவ வேண்டும்" என்றார் இஷா அம்பானி.
அவரது சரும பராமரிப்பு பற்றி கேட்டபோது, "எனது அழகின் ரகசியம் என்னவென்றால், எனக்கு அழகு பராமரிப்பு வழக்கங்கள் இல்லை என்றும் சருமத்திற்காக எதுவும் செய்வதில்லை" என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |