கொரியன் பெண்களை போல முகம் பொலிவாக இருக்க இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், கொரிய பெண்களை போல முகம் பொலிவாக இருக்க உதவும் 4 உணவுகள் குறித்து பார்ப்போம்.
கடற்பாசி
இதில் அயோடின், கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கிறது.
இது தைராய்டு பிரச்சனை, தோல், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக கடற்பாசி வைத்து செய்யப்படும் சூப்பை பாரம்பரியமாக பிறந்தநாள்களிலும், பெண்கள் பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிடுகிறார்கள்.
கிம்ச்சி
கிம்ச்சி என்பது கொரியாவின் தேசிய உணவு வகைகளில் ஒன்று. இது புளித்த முட்டைக்கோஸ் அல்லது முள்ளங்கியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
புரோபயாடிக் நிறைந்த இந்த உணவு குடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்துடன் நெருக்கமாக தொடர்பை கொண்டிருக்கிறது.
இந்த உணவை சாப்பிடுவதால் முகப்பரு, மந்தமான தன்மை மற்றும் வீக்கத்தை குறைத்து தடுக்கிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ சத்துக்களை அதிகரித்து சரும பளபளப்பை கொடுக்கிறது.
இது கிளைசெமிக் குறியீட்டிலும் குறைவாக உள்ளதால் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
மேலும் இது எளிதாக நிறைவான உணர்வை தருவதோடு மிளிரும் சருமத்திற்கும் உதவுகிறது.
டோஃபு
புரதங்களால் நிறைந்த டோஃபு ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் கொலாஜனை அதிகரிக்கவும் உதவும்.
இது சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க வைக்க உதவுகிறது.
இது கொரிய சூப் வகைகள், குழம்புகள், சாலடுகள் அல்லது லேசாக வறுத்து சோயா சாஸில் நனைத்து டோஃபுவை சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |