உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் இன்று வரை கொள்ளை அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா?
உலக அழகிப் போட்டியில் வென்று இருபத்தியேழு வருடங்கள் ஆனாலும், ஐஸ்வர்யா ராய் பார்ப்பதற்கு இன்றும் இளமையாகத் தான் உள்ளார்.
பாலிவுட்டில் பிரபலமாக விளங்கும் ஐஸ்வர்யா ராய் தற்போதும் கூட தனது அழகை சிறந்த முறையில் பராமரித்து வருகிறார். இவர் தனது அழகுக்கு என்று பிரத்யேகமாக சில அழகுக் குறிப்புகளை பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ந்த நேர்காணலில் நடிகை ஐஸ்வர்யா தான் என்றும் அழகுடன் இருக்க என்ன செய்கின்றார் என்று பகிர்ந்துள்ளார். அந்தவகையில் ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக முக அழகுக்கான குறிப்பு என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
- சமீபத்தில் நிகழ்ந்த நேர்காணலில் நடிகை ஐஸ்வர்யா ராய் சரும ஆரோக்கியம் பற்றி கூறுகையில், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு ஜங்க் ஃபுட்டை தவிர்த்து விட்டு வீட்டிலே சமைத்த உணவுகளையே விரும்புவதாக கூறியுள்ளார்.
- சரியான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவினை உட்கொள்வது சருமத்திற்கும், தலைமுடிக்கும் பல்வேறு அதிசயங்களை ஏற்படுத்தும் என்கிறார்.
- அதேபோல் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ள மற்றொரு சரும அழகுக்கான விஷயம் வெள்ளரிக்காய் சாறு பயன்படுத்துவது தான். முகம் மற்றும் சரும அழகுக்கு உடலில் சரியான அளவில் நீரேற்றம் இருக்க வேண்டும்.
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்களை நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அதேபோல் அழகாக இருக்க உதவும் எளிய மந்திரம் மகிழ்ச்சி இருப்பது தான் என்கிறார் ஐஸ்வர்யா ராய்.
பேஸ்மாஸ்க்
வெள்ளை கொண்டைக்கடலை மாவு, தயிர், தேன் மூன்றையும் பேஸ்ட் போல் தயாரித்து பேஸ் மாஸ்க்காக போட்டுக் கொள்ளவும். இதனை 20 நிமிடங்களை வரை அப்படியே விட்டு விட்டு பின்னர் அதனை கழுவினால் போதும். இந்த பேஸ் மாஸ்க் உங்கள் சோர்வடைந்த முகத்தை புத்துணர்வு பெறச் செய்யும்.