ட்ரம்ப் Vs மஸ்க்: மோதலால் அடுத்து என்னவெல்லாம் நடக்கும்?
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் மோதலால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பேசுபொருளாகியுள்ளது.
ட்ரம்ப், எலோன் மஸ்க் மோதல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை ஆதரித்து பிரச்சாரம் செய்த எலோன் மஸ்க் தற்போது அவருடன் முரண்பட்டுள்ளார்.
ட்ரம்ப் உருவாக்கிய DOGE அமைப்பில் இருந்து வெளியேறிய மஸ்க், பட்ஜெட் மசோதாவால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. ட்ரம்பை கடுமையாக விமர்சித்து மஸ்க் பதிவிட்டும் வருகிறார்.
பிரிவால் என்னவாகும்?
ட்ரம்ப் மற்றும் மஸ்க் மோதலால் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. மஸ்கிற்கு எதிராக ட்ரம்ப் அமெரிக்க அரசாங்க இயந்திரத்தை திருப்பினால், அது மஸ்கிற்கு வேதனை தரக்கூடிய ஒரு நகர்வாக இருக்கும்.
இதன் விளைவால் நேற்றைய தினம் டெஸ்லாவின் பங்கு விலை 14 சதவீதம் சரிந்தது. பதிலுக்கு மஸ்க், தனது நிறுவனங்களுக்கான நிதியைத் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்யுமாறு ட்ரம்பிற்கு சவால் விடுத்தார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் டிராகன் விண்கலங்களைத்தான் சார்ந்துள்ளது.
இதனால் தனது டிராகன் விண்கல சேவையை நிறுத்தும் பணியை, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக துரிதப்படுத்த விரும்புவதாக மஸ்க் தெரிவித்தார்.
அடுத்து என்ன?
இதேபோல் ட்ரம்புக்கு பதிலடி தர மஸ்க்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வருட தேர்தல்கள் மற்றும் முதன்மைத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர் நிதியுதவி அளிக்கலாம்.
இதன்மூலம் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பை அவரால் ஏற்படுத்த முடியும்.
அதேபோல் ட்ரம்ப் DOGE அமைப்பில் உள்ள மஸ்கின் முன்னாள் நண்பர்களை குறிவைக்கலாம் அல்லது பைடன் ஜனாதிபதியாக இருந்தபோது மஸ்கின் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கலாம்.
தற்போது அவருக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இருவருக்கும் இடையிலான இந்த கூச்சல், குழப்பம் அடங்காத வரை, அமெரிக்க அரசியலில் உள்ள மற்ற அனைத்து விடயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், எலோன் மஸ்க் (Elon Musk) "ட்ரம்பின் ஜனாதிபதி பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள்தான்; ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |