குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பெற்றோர் செய்யும் செயல்: சுவிஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்குவது அல்லது ஆட்டுவது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என சுவிஸ் மருத்துவமனைகள் இரண்டு கூறியுள்ளன.
குழந்தையை வேகமாக குலுக்குவது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்
குழந்தை அழும்போது பல பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செய்கிறார்கள்.
ஆனால், அப்படி செய்வது குழந்தையின் மூளை, கண்ணின் பின்னாலுள்ள விழித்திரை ஆகிய உறுப்புகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் சுவிஸ் மருத்துவர்கள்.
அதனால், குழந்தைக்கு மன நல பாதிப்பு மற்றும் கண்பார்வையில் கோளாறு ஆகிய வாழ்நாள் முழுமைக்குமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் அவர்கள்.
பிரச்சாரம் துவக்கம்
ஆகவே, குழந்தைகளை அப்படி வேகமாக ஆட்டக்கூடாது என்பதை உணர்த்தும் நோக்கில் ஜெனீவா மற்றும் Vaud பல்கலை மருத்துவமனைகள் பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ளன.
குழந்தை அழுதால், அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செயாமல், குழந்தையை கட்டிலில் அமைதியாக படுக்க விடுவதே போதுமானது என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |