அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
heart attack
diabetes
cholesterol
weight gain
stomach ulcer
By Kishanthini
பிரியாணியை அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகளும் ஏற்படுகின்றது. அந்தவகையில் பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
-
அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
-
பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது.இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
- பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US