பிரான்சில் ராணி கமீலா செய்த செயல்: சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனம்
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அரசுமுறைப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், ராணி கமீலா செய்த ஒரு செயல் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
பிரான்சில் ராணி கமீலா செய்த செயல்
இரண்டாம் உலகப் போரின்போது, ஜேர்மனியின் பிடியிலிருந்து பிரான்சை விடுவிக்க, 1944ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, பிரித்தானிய அமெரிக்க கூட்டுப் படைகள் பிரான்சில் சென்று இறங்கின.
அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய வீரர்கள் உயிரிழந்தார்கள். ஏராளமான பிரெஞ்சுக் குடிமக்களும் கொல்லப்பட்டார்கள். அந்த நிகழ்வின் நினைவாக D-Day நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரான்சின் நார்மாண்டியிலுள்ள Ver-sur-Mer என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரித்தானிய ராணி கமீலாவும் பிரான்ஸ் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானும் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
ராணி கமீலா முதல் மலர் வளையத்தை வைக்க, அவரைத் தொடர்ந்து மலர் வளையம் வைத்த பிரிஜிட், எதிர்பாராமல் கமீலாவின் கையைப் பிடிக்க முயன்றார்.
ஆனால், கமீலா அவரிடம் கையைக் கொடுக்கவில்லை. சட்டென அதை உணர்ந்த பிரிஜிட் அசௌகரியமடைந்தாலும், கமீலாவின் கையை அவராகவே சென்று பிடித்துக்கொண்டார்.
Awkward moment Brigitte Macron breaks Royal protocol as she tries to hold Queen Camilla's hand at D-Day memorial in Normandy#Macron #DDay #Camilla #Royals pic.twitter.com/Qi3h66iYee
— Daily Mail Online (@MailOnline) June 6, 2024
வெளியாகிவரும் முரண்பட்ட கருத்துகள்
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மக்கள் அதைக் குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
பிரிஜிட் பாசமாக கமீலாவின் கையைப் பிடிக்கமுயன்றார். ஆனால், இந்த கமீலா தன் கையைக் கொடுக்கவில்லை, அது சரியல்ல என்று சிலர் கூறியுள்ளார்கள்.
ஆனால், சிலரோ, அது மரபல்ல, அதனால்தான் கமீலா தன் கையைக் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
இன்னொருவரோ, ராணியின் கையை யாரும் பிடிக்கக்கூடாது என்பது மரபு, அதனால்தான் கமீலா பிரிஜிட்டின் கையைப் பிடிக்கவில்லை.
என்றாலும், ஒரு கணம் ராணியாக தடுமாறினாலும், கமீலா பிறகு பிரிஜிட்டின் அன்பை உணர்ந்து அவரது கையைப் பிடித்துக்கொண்டார் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |