நோன்பு இருப்பவர்கள் நீரிழப்பைத் தவிர்க்க எதை சாப்பிட வேண்டும்?
இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது துவங்கி உள்ளது. இந்த மாதத்தில் ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள், சூரிய உதயம் துவங்கி, சூரியன் மறைவு வரை எதையும் சாப்பிடாமல், தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
நோன்பு மாதத்தில், காலை வேளையில், திட மற்றும் திரவ உணவுகளை நாம் தொடர்ந்து தவிர்த்து வரும் பட்சத்தில், நமது உடலில் தீவிர தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது இதன்காரணமாக, நமது உடலின் முக்கிய செயல்பாடுகளில் கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கமால் இருக்க ஒரு சில உணவுகளை எடுத்து கொள்ளவும் வேண்டும், தவிர்க்கவும் வேண்டும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்
- தர்பூசணி பழத்தில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் மினரல்கள், உங்கள் உடலின் எலக்ட்ரோலைட்ஸ்களின் அளவை பராமரித்து, உடலில் நீர் இழப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கின்றன.
-
கீரை வகைகள் நோன்பு இருக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இது இனிய வரப்பிரசாதமாக விளங்குகிறது. கோடை காலத்தில், சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் அருமருந்தாகவும் இந்த கீரை வகைகள் விளங்குகின்றன.
-
வெள்ளரி பழத்தில் உள்ள அதிகப்படியான நீர், ரமலான் நோன்பு இருப்பவர்களுக்கு, அதிக நீர் இழப்பு ஏற்படாமல் காக்க பயன்படுகிறது.
-
ரமலான் நோன்பு மாதத்தில் விரதம் இருப்பவர்கள், தக்காளி பழத்தை அதிகளவில் பயன்படுத்தி வந்தால், அவர்களது உடலில் இருந்து நீர் இழப்பு தடுக்கப்படுவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
- தக்காளி பழத்தில் உள்ள லைகோபீன் ஆன்டி ஆக்சிடண்ட், நமது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது.
- பாலாடையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், உடலில் ஏற்படும் நீர் இழப்பை கட்டுப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது, உடலின் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. ரமலான் மாதத்தில், நோன்பு இருப்பவர்களுக்கு, பாலாடை இனிய வரப்பிரசாதமாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
-
மது வகைகளை, நாம் இந்த மாதத்தில் மட்டுமல்லாது, எப்போதும் தவிர்க்கும் பட்சத்தில், அது நம் உடலுக்கு எப்போதும் நன்மைபயப்பனவாக இருக்கும்.
-
காபி அல்லது டீயை அதிகளவில் குடித்தால், அதுவும் நமது உடலில் இருந்து அதிகப்படியான நீர் இழப்பு நிகழ காரணமாக அமைந்து விடும். எனவே இவற்றை தடுப்பது நல்லது.
-
விளையாட்டு வீரர்கள், இந்த ரமலான் நோன்பு மாதத்தில், விரதம் இருப்பவர்கள், அதிக கலோரிகள் கொண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது.
-
வீட்டிலேயே சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மட்டுமே, கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க உதவும்.
- இயற்கை பழங்கள் இல்லாமல், செயற்கை பொருட்களான எசன்ஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் செயற்கையான பழச்சாறுகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், இது வயிறு சம்பந்தமான பல்வேறு உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
-
நீர் இழப்பை தடுக்க விரும்புபவர்கள், சோடியம் அதிகம் கொண்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதற்காக, சோடியம் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டால், நமது உடலின் இன்றியமையாத பணிகள் பாதிக்கப்படும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.