மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்கின்ற தவறுகள்! என்ன தெரியுமா?
மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பான விஷயம் என்றாலும் அவர்களுக்கு அந்த சமயத்தில் நிறைவான ஓய்வு தேவை. சிலர் வயிற்று வலியில் இருந்து விடுபட மாத்திரை பயன்படுத்துவது உண்டு.
இதனால் எதிர்காலத்தில் பக்க விளைவுகள் வருவதற்கான அதிக வாய்ப்புள்ளது. மற்றும் சிலர் வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை பயன்படுத்துவார்கள்.
அதலில் முக்கியமாக இருப்பது வெந்தயம். வெந்தயம் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். ஆனால் அதனை மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவது ஆரோக்கியமற்றது என்று ஆய்வில் வெளியாகியுள்ளது.
இந்த நேரத்தில் பலரும் வெந்தயம் சாப்பிடுவதால் மாதவிடாய் சுழற்சியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெந்தயம் உடல் உஷ்ணம் தணிக்கும் என்பதால் இதை மாதவிடாய் நாட்களில் தினமும் எடுக்க கூடாது.
ஏனெனில் இதில் உள்ள புரோலாக்டின் என்னும் ஹார்மோனை அதிகரிக்க செய்யும். இதனால் இரத்தம் முழுமையாக வெளியேறாமல் தடுக்க இருக்க வாய்ப்புண்டு.
இந்த மாதவிடாய் நாட்களில் கார்போஹைட்ரேட் உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். இது உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு இந்த மாவு பொருள் மலச்சிக்கலை உண்டாக்க செய்யலாம்.
சில பெண்களுக்கு கால் பிடிப்பு, தசைப்பிடிப்பு, கால் இழுத்து பிடிக்கும் உணர்வு, கால் வலி போன்றவை இருக்கலாம். இதற்கு காரணம் கால்சியம் சத்து குறைவாக இருக்கலாம். அப்போது பனைவெல்ல பானகம், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு அடை இவற்றை சேர்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தேவையானவை போதுமான ஓய்வு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு, மன அமைதி இவை மூன்றுமே அவசியமாக கருதப்படுகிறது