அட்சய திருதியை: தங்கம், வெள்ளி வாங்க முடியாவிட்டால் இந்த பொருள் வாங்கினால் போதும்!
பொதுவாகவே இந்து மதத்தை பொறுத்த வரையில் அனைத்து விரதங்களும் பண்டிகைகளும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மக்களால் கொண்டாடப்படும் ஓர் மங்களகரமான நாள் தான் அட்சய திருதியை.
இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடும் சிறப்பு மரபு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் வைஷாக மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியா திதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு அக்ஷய திருதியை மே 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிப்பட்டால் அவர்களுடைய வாழ்வில் பணத்திற்கும் செல்வத்திற்கும் பஞ்சமே இருக்காது என்று கூறப்பகிறது.
இந்த நாளில் செய்யும் தானம், நற்செயல்கள் மற்றும் சுப காரியங்கள் பலனளிக்கும். இது மட்டுமின்றி, விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் பிறந்தநாளாகவும் அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி பூஜை செய்வது மரபாக இருந்து வருகிறது. பணவீக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளியை உங்களால் வாங்க முடியவில்லை என்றால், இதைத் தவிர வேறு பொருட்களை வைத்து நீங்கள் பூஜை செய்யலாம். அது என்னென்ன பொருட்கள் என்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எந்த பொருட்களை வாங்கலாம்?
ஸ்ரீ யந்திரம்
அட்சய திருதியை நாளில் ஸ்ரீயந்திரம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில், ஸ்ரீயந்திரத்தை வாங்கிய பிறகு, அதை வீட்டின் பூஜை இடத்தில் வைக்கவும். இதன் மூலம், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களை பெறலாம்.
மாடு
அட்சய திருதியை நாளில் மாடுகளை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் பசு மாடுகளை வாங்கி லட்சுமி தேவியின் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
மண்பானை
அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க முடியாவிட்டால், கண்டிப்பாக மண் பானையை வாங்குங்கள். இதன் காரணமாக வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
மஞ்சள் கடுகு
அட்சய திருதியை நாளில் மஞ்சள் கடுகு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மஞ்சள் கடுக்காய் வாங்கினால் குடும்ப உறவில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
சங்கு
அக்ஷய திருதியை நாளில் சங்குகளை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் அன்னை லக்ஷ்மியின் ஆசீர்வாதம் வீட்டில் நிலைத்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |