டீ பிரியர்களே உஷார்! மூலிகை தேநீரில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா? ஆய்வில் வெளிவந்த தகவல்
சிலருக்கு டீ குடித்தால் புத்துணர்ச்சியாக இருப்பது போல உணர்வார்கள். இதனால் ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து ஐந்து டீ வரைக்கும் அருந்துவார்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது அற்புதமான பழமொழி. சுவையாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தொண்டை அடைத்து உயிர் போகும் அபாயம் உள்ளது.
இதனால் எதை சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நாம் மூலிகை தேநீர்களை அருந்துவதால் உடலிற்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்று நினைத்து கொள்கிறோம்.
அது முற்றிலும் தவறு. ஒரு சில மூலிகைத் தேநீா்கள் நமக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே எந்த வகையான தேநீரை அருந்த வேண்டும், எந்த வகையான தேநீரைத் தவிா்க்க வேண்டும் என்பதை தேநீா் பிாியா்கள் தொிந்து வைத்திருக்க வேண்டும்.
எலுமிச்சை தூள் டீ:-
- எலுமிச்சை சாறை தேநீரில் கலந்து குடிப்பதை எலுமிச்சை டீ என்று அழைக்கிறோம். ஆனால் பொட்டலத்தில் விற்கும் எலுமிச்சை தூளை பயன்படுத்தக்கூடாது.
- ஏனென்றால் அதில் தரமில்லாத தேயிலைகள் சேர்ப்பதால் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
கவா டீ:-
- தற்பொழுது கவா டீ மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. ஆனால் அதில் மன அழுத்தத்தை கொடுக்க கூடிய துகள்கள் கலப்பதால் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- இந்த மாதிரியான குடிநீர்கள் நுரையீரல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று US Food and Drug Administration எச்சரித்துள்ளது.
கம்ஃப்ரே தேநீா்:-
- கம்ஃப்ரே தேநீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் காயங்கள், வலிகள் போன்றவற்றை குணப்படுத்தும் என்று கூறுவார்கள்.
- இதனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த டீயை அருந்தியதாக கூறுவார்கள். ஆனால் இதில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தாது உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.