பணியிலிருந்து வீடு திரும்பும் சுவிஸ் நாட்டவர்கள் ஆற்றில் செய்யும் செயல்: அதிர்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகள்...
சுவிஸ் நகரம் ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள், அந்நகர மக்கள் செய்த ஒரு செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடைகளைக் களைந்து பை ஒன்றிற்குள் வைத்துக்கொண்டு ஆற்றிற்குள் குதித்துள்ளார்கள் அவர்கள்.
அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சுவிட்சர்லாந்தின் Basel நகரில்தான் அந்த விடயம் நடக்கிறது.
சுற்றுலாப்பயணியாகிய Alexa என்பவர், Basel நகரில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவோர், தங்கள் அலுவலக உடைகளைக் களைந்து ஒரு மீன் வடிவ பைக்குள் வைத்துவிட்டு, Rhine ஆற்றுக்குள் குதிப்பதைக் கண்டுள்ளார்.

Picture: TikTok/alexas_adventures
ஆற்றில் நீரின் வேகத்தால் இழுத்துச் செல்லப்படும் அவர்கள், தாங்கள் செல்லவேண்டிய இடம் வந்ததும் இலாவகமாக கரையேறுகிறார்கள்.
கரையோரம் ஆங்காங்கே உடை மாற்றும் அறைகள் இருக்க, அங்கு சென்று உடை மாற்றிவிட்டு பிரெஷ்ஷாக வீட்டுக்குத் திரும்புகிறார்களாம் Basel நகரில் வாழ்பவர்கள்.

Picture: TikTok/alexas_adventures
விடயம் என்னவென்றால், இது சுவிஸ் நகரங்கள் சிலவற்றில் நீண்ட காலமாகவே நடந்துவரும் ஒரு வழக்கம்தான். அதாவது மக்கள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப, ஆற்று நீரின் வேகத்தைப் பயன்படுத்தி அதை ஒரு போக்குவரத்தாக பயன்படுத்துவதுண்டு.
தற்போது இந்த விடயம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியே தெரியவந்துள்ளதையடுத்து கவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Picture: TikTok/alexas_adventures

Picture: TikTok/alexas_adventures

TikTok/alexas_adventures