லட்சுமி தேவியின் அருளைப்பெற வேண்டுமா ?அப்போ மறக்காமல் இதை செய்யுங்கள்
செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டும் தான் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
மகாலட்சுமியின் அருளை பெருவதற்காக கடைபிடிக்கப்படும் எத்தனையோ முக்கியமான விரதங்களில் ஒன்று வரலட்சுமி விரதம்.
அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதமாகும்.
வரலட்சுமியின் அருளைப்பெற செய்யவேண்டியவை
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.காலை மாலை என வாசலில் கோலமிட்டு வீட்டில் விளக்கேற்றவேண்டும்.
பெண்கள் தூய சிந்தனையோடு சமையலில் ஈடுபடுங்கள்.வீட்டிற்கு வரும் விருந்தினரை மனதார உபசரியுங்கள்.
குழைந்தைகள்,பெரியவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் லட்சுமியின் அருளை பெற முடியும்.
வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் சண்டை சச்சரவிற்கு இடம் குடுக்கத்திற்கள்.
வெற்றியோடு வாருங்கள் என நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். அதனால் வீட்டில் நேர்மறையான ஆற்றல் இருக்கும்.
செல்வ வளம், தைரியம், ஞானம், குழந்தை வரம் உள்ளிட்ட வரங்களை அருள்பவள் மகாலட்சுமி. அவளின் ஆசியை பெற இதனை கடைபிடிப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |