அடர்ந்த காடுபோல் முடி வளர வேண்டுமா? இந்த 6 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை பெற, இந்த 6 விடயங்களை தவறாமல் செய்யுங்கள்.
ஒமேகா 3 உணவு
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடியின் வளர்ச்சியிலும் இதற்கு முக்கியமானப் பங்கு உண்டு.
ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளில் உள்ள வைட்டமின் பி தலைமுடிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.
பழங்கள்
பழங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் தலைமுடியின் வேர்க்கால்களை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும்.
மேலும் பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பொடுகு உள்ளிட்ட பாக்டீரியா தொற்றுக்களைச் சரிசெய்து முடிக்கு ஊட்டத்தை அளித்து வளர்ச்சியைத் தூண்டுகிறது.
தலைமுடி மசாஜ்
தலைமுடி உதிர்வு குறைந்து நன்கு வளர தலைமுடியின் வேர்க்கால்கள் நீர்ச்சத்துடனும், ரத்த ஓட்டமும் சீராக இருக்க வேண்டும்.
தலைமுடி எண்ணெய் எடுத்துக் கொண்டு அதை லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கும் போது தலையில் வேர்க்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சியை தூண்டும்.
மதுவை தவிர்த்தல்
மது அதிகமாக அருந்துவது உடலில் டாக்சின்கள் அதிகரிப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இதனால் இதயம், மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைபடவும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.
இதனால் முடி வளர்ச்சி தடைபடும் மற்றும் முடி உதிர்தல் அதிகமாகும்.
வெப்பமூட்டும் கருவி
ஹேர் டிரையர் போன்ற முடியை சூடாக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது முடியை அதிகமாக வறட்சியாக்கும்.
அதோடு முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே முடிக்கு வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்தாமல் ஃபேன் காற்று அல்லது சூரிய ஒளியில் முடியை காயவைக்கலாம்.
வெள்ளை சர்க்கரை
வெள்ளை சர்க்கரை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் தலைமுடியும் மிக வேகமாக வலுவிழந்து உதிரவும் வேர்க்கால்கள் பலவீனமாகும். மேலும் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதால் விரைவில் நரைமுடி உண்டாகும்.
istock
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |