low sugar வரும்போது என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக திடீர் சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவது ஆபத்தானது.
உடனடி விளைவுகளை காட்டும். எனவே அடிக்கடி ரத்த பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வது நல்லது.
அந்தவகையில் இதன் அறிகுறிகள் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
திடீர் சர்க்கரை அளவு குறைவின் அறிகுறிகள்:
- கை, கால் உதறல்
- உடல் சோர்வு
- வியர்த்து போதல்
- மயக்க நிலை
- மரத்துப்போதல்
சர்க்கரை அளவு அதிகமாவதன் அறிகுறிகள்
- மரத்துப்போதல்
- பேச்சில் தடுமாற்றம்
- உடல் சோர்வு
- நீரிழத்தல்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- பதற்றம்
- கவனச்சிதறல்
காரணங்கள்
- சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருத்தல்
- புரதச்சத்துக்கள் இல்லாமல் குறைவான அளவு உணவு உண்ணுதல்
- மாத்திரை அல்லது இன்சுலின் போட்டு குறிப்பிட்ட நேரத்தில் உண்ணாதிருத்தல்
- சில நேரங்களில் கடுமையான பணிகளில் ஈடுபடும்போது சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும்.
சர்க்கரை அளவு குறையும்போது செய்ய வேண்டும்?
பொதுவாகவே, சர்க்கரை நோயாளிகள் குறைந்தளவு இனிப்பு தன்மையுள்ள சாக்லேட்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இது போன்ற சமயங்களில் ஓரிரு சாக்லேட்களை சாப்பிடுவது, ஜூஸ் போன்ற பானங்கள் அருந்துவது, சர்க்கரை தன்மையுள்ள பொருட்களை சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது.
அளவில்லாமல் கார்ப்ஸ் அதிகமாக உள்ள உணவுகளை உண்டுவிடக் கூடாது. உடனடியாக ஜீரணிக்க கூடிய சிறிதளவு உணவை உண்டுவிட்டு 15 நிமிடங்கள் களைத்து நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த குறிப்பிட்ட அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
5 கிராம் கார்ப்ஸ் உள்ள உணவை சாப்பிட்டுவிட்டு 15 நிமிடம் கழித்து உங்கள் சர்க்கரை அளவு உயர்கிறதா அல்லது 70 mg/dL அளவில்தான் தொடர்கிறதா என்பதை பரிசோதியுங்கள். இப்படி ரத்த சர்க்கரை அளவு சரியான அளவுக்கு வரும்வரை 15 -15 நிமிட இடைவெளியில் இதை செய்து பாருங்கள். இதனால், எதிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவு குறையும்போது எவ்வளவு சாப்பிட வேண்டும் என தெரிந்து விடும்.