இந்தியாவில் முதன்முதலில் உருவான திரைப்படத்தின் பெயர்.., என்ன தெரியுமா?
இந்தியர்களின் வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் சினிமா முக்கிய இடம் பிடித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் முதன்முதலில் உருவாகிய திரைப்படம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் படத்தை உருவாக்கியவர் தாதாசாகேப் பால்கே. இவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் அச்சு தொழில், புகைப்படம், ஓவியம் போன்ற பல வேலைகள் செய்தார்.

1911ஆம் ஆண்டு தி லைஃப் ஆஃப் கிறிஸ்ட் என்ற திரைப்படத்தை பார்த்த பிறகு, தானும் படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் உருவானது.
அதற்காக லண்டன் சென்று திரைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டார்.
பின்னர் தனது சேமிப்புகளையும், மனைவியின் நகைகளையும் பயன்படுத்தி பணம் திரட்டி, இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கினார்.
1913ஆம் ஆண்டு, ராஜா ஹரிச்சந்திரா என்ற படம் வெளியானது. இது இந்தியாவின் முதல் முழுநீள திரைப்படமாகும்.
அது, சமஸ்கிருத இதிகாசங்களில் போற்றப்படும் அறம் சார்ந்த மன்னரான ஹரிச்சந்திரனின் கதையாகும்.
இந்த புராணப் படம் இந்தியத் திரைப்படத்துறையின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது.
கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ஒரு ஊமை படமாகும்.
அந்த காலத்தில் பெண்கள் நடிக்க முன்வராததால், பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே நடித்தனர்.
இந்த படம் ஆரம்பத்தில் அதிக வரவேற்பு பெறவில்லை. ஆனால் பின்னர் புதிய விளம்பர முறைகள் மூலம் மக்கள் அதிகமாக திரையரங்குக்கு வர ஆரம்பித்தனர்.
படம் வெற்றிபெற்று, பல நாட்களில் தொடர்ந்து ஓடியது. இந்தியா மட்டுமல்லாமல் லண்டன், கொழும்பு போன்ற இடங்களிலும் திரையிடப்பட்டது.
இந்திய திரைப்படத் துறைக்கு அவரது அசாதாரண பங்களிப்பு காரணமாக இன்றும் அவரது பெயரில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |