என் மகள் கடைசியாக என்ன பேசினாள்?: பிரித்தானிய ஒன்லைன் காதலனால் கொல்லப்பட்ட கனேடிய இளம்பெண்ணின் தாய் கதறல்...
ஏழு ஆண்டுகள் இணையம் வாயிலாக பழகிய காதலனைக் காண்பதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற கனேடிய இளம்பெண்ணை, கொடூரமாக கொலை செய்தார் அந்த பிரித்தானிய காதலர்.
தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் தன் மகள் என்ன பேசினாள் என்று கூட தெரியாதே, அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ என கண்ணீர் விடுகிறார் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் தாய்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆஷ்லீ (Ashley Wadsworth) என்ற இளம்பெண்ணுக்கு 12 வயதே இருக்கும்போது, இணையத்தில் ஜாக் (Jack Sepple) என்ற 15 வயது பிரித்தானிய சிறுவனை சந்தித்திருக்கிறார்.
ஏழு வருட இணைய நட்பு காதலாக மாறியதோ என்னவோ, தனக்கு 18 வயது முடிந்ததும், தனது காதலனுடன் வாழ்வதற்காக பிரித்தானியாவுக்குப் புறப்பட்டிருக்கிறார் ஆஷ்லீ.
image - yahoo
ஆனால், அது தனக்கு பிடிக்கவில்லை என்கிறார் ஆஷ்லீயின் தாயாகிய கிறிஸ்டி (Christy Gendron). ஒரு தாயாகிய அவரது உள்ளுணர்வு எச்சரித்ததோ என்னவோ, அவரும் சரி, ஆஷ்லீயின் தந்தையாகிய Ken Wadsworthம் சரி, ஆஷ்லீயைத் தடுத்திருக்கிறார்கள். ஆனால், நான் வளர்ந்துவிட்டேன் என்று கூறி பெற்றோர் சொல்லைக் கேளாமல் பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுவிட்டார் ஆஷ்லீ.
ஆனால், பிரித்தானியாவுக்கு வந்தபின் ஜாக்கின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதை கவனித்திருக்கிறார் ஆஷ்லீ. ஆஷ்லீயின் மத நம்பிக்கை மற்றும் குடும்பம் குறித்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. ஆகவே, இது சரிவராது என புரிந்துகொண்ட ஆஷ்லீ வீடு திரும்ப முடிவு செய்ய, அவரைக் கழுத்தை நெறித்தும், கத்தியால் 90 முறை குத்தியும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார் ஜாக்.
image - yahoo
பாவம் என் மகள், அவன் கையில் என்ன பாடுபட்டிருப்பாள், எவ்வளவு பயந்து நடுங்கியிருப்பாள், என் மகள் கடைசியாக என்ன பேசினாள், அவள் எங்களைத் தேடினாளா, இந்த கேள்விகளுக்கான பதில் இரண்டு பேருக்குத்தான் தெரியும் என்று கூறும் ஆஷ்லீயின் தாயாகிய கிறிஸ்டி, பதில் தெரிந்தவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றொருவரைக் கேட்டு பயனில்லை, எப்படியும் அவர் உண்மையை சொல்லப்போவதில்லை என கண்ணீர் விடுகிறார்.
ஜாக்குக்கு 23 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறையில் செலவிடும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரி, எப்படியும் அதற்குப் பின் அவன் வெளியில் வந்து வாழத்தான் போகிறான், ஆனால், என் மகள் திரும்பி வரமாட்டாளே என்கிறார் கிறிஸ்டி.
image - yahoo