பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க இந்திய ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்திய ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
என்னென்ன ஆயுதங்கள்?
பஹல்காம் துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பல இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது ஏவுகணைகளை ஏவி இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவமானது வான் பாதுகாப்பு பிரிவு எல்-70 பீரங்கி, இசட்யு-23 எம்.எம் துப்பாக்கி, சில்கா பீரங்கி, யுஏஎஸ் , எஸ்-400 சுதர்ஸன சக்ரா ஆகிய போர் தளவாடங்களை பயன்படுத்தியது.
எல்-70 பீரங்கி (L-70 cannon)
எல்-70 என்ற சிறிய ரக பீரங்கிகளில் 40 எம்எம் ரக குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது போர்பஸ் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.
ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் தாழ்வாக பறந்து வரும் விமானங்களை தாக்குவதற்கு இந்த பீரங்கிகளை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது. இந்த பீரங்கிகளை நவீன எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கட்டுப்பாட்டு கருவிகளுடன் இந்தியா பயன்படுத்துகிறது.
இசட்யு-23 எம்.எம் துப்பாக்கி (ZU-23 MM gun)
இசட்யு-23 எம்எம் என்பது இரட்டை பேரல்கள் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கி ஆகும். இது சோவியத் கால மொடலாக இருந்தாலும் எளிதாக திறம்பட இயக்க முடியும் என்பதால் இந்திய ராணுவம் இதனை பயன்படுத்துகிறது.
தாழ்வான உயரங்களில் பறந்துவரும் இலக்குகளை தாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இந்த பீரங்கியானது ரேடார் மற்றும் ஆப்டிக்கல் இலக்கு கருவிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சில்கா பீரங்கி (Schilka Cannon)
இசட்எஸ்யு - 23-4 என்று அழைக்கப்படும் சில்கா பீரங்கியானது எதிரிநாட்டு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்படுகிறது.
இதன் ரேடார் வழிகாட்டுதல்படி துல்லிய தாக்குதல் நடத்த முடியும். இதில் 23 எம்எம் ரக பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆளில்லா வான்பாதுகாப்பு துப்பாக்கி (யுஏஎஸ்)
ஆளில்லா வான் பாதுகாப்பு துப்பாக்கி யுஏஎஸ் ஆனது ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க உருவாக்கப்பட்டது. இதில் உள்ள ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள், ஜாமர்கள் ஆகியவை எதிரி நாட்டு விமானங்களை எளிதாக கண்டறிகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |