2026 -ம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும் தெரியுமா?
அடுத்த இரண்டு ஆண்டுக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கும் என்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
2026 -ல் தங்கத்தின் விலை
தங்கமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை தினந்தோறும் மாறுபட்ட விலைகளில் விற்கப்படும்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. அந்தவகையில், இன்று தங்கத்தின் விலை சென்னையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.7000 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.56,000க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், 2026 -ம் ஆண்டுக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10,000 ரூபாயை எட்டும் என்று தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |