2040ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?
பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.
இந்தியாவில் தங்கம் என்பது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
அந்தவகையில், 2040ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு இருக்கும் என்று பார்க்கலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கம் விலை உயர்ந்த விதத்தை பார்க்கும்போது, எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8% முதல் 10% வரை இருக்கும் என கணித்தால், 2040ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் ரூ.4.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செல்ல வாய்ப்புள்ளது.
சிலர் கணிப்பில், உலக பொருளாதார நெருக்கடி அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், இந்த விலை ரூ.6 லட்சத்தையும் எட்டக்கூடும் என கூறப்படுகிறது.

பணவீக்கம், ரூபாய் மதிப்பு குறைதல் மற்றும் அதிகரிக்கும் தேவை இவையனைத்தும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்களாகும்.
மேலும், உலக மத்திய வங்கிகள் தங்க சேமிப்பை அதிகரிப்பதும் விலையை உயர்த்துகிறது.
இவ்வாறான நிலையில், 2040ல் ஒரு சாதாரண நகை வாங்க கூட பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் டிஜிட்டல் கோல்டு மற்றும் Gold ETF போன்ற முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |