1 லட்ச ரூபாயின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும்?
நீங்கள் கையில் வைத்திருக்கும் 1 லட்சம் ரூபாயின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
பணவீக்கம் (Inflation)
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 100 ரூபாயின் மதிப்பு தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என்பதை நாம் எல்லோருக்கும் அறிந்த விடயம் தான்.
தற்போது, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பும் குறைவாக வாய்ப்புள்ளது. இதனை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டும் என்றால் இப்போது இருந்தே அதற்கான திட்டமிடுதலை நாம் முன்னெடுக்க வேண்டும்.
பணவீக்கம் அதிகரித்து வருவதால் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால், பணத்தின் மதிப்பும் குறைந்துவிடுகிறது. இந்த மாதிரியான நேரங்களில் நாம் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். நமது வருமானம் முதலீட்டை விட அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 5 முதல் 6% வரை உள்ளது. இதேபோல் நீண்ட கால பணவீக்க விகிதம் 6 % இருக்கும் என்று கருதலாம்.
அதாவது 6% பணவீக்க விகிதத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தின் மதிப்பு தோராயமாக ரூ.55,840 ஆக குறைந்துவிடும். 20 ஆண்டுகள் கழித்து மேலும் ரூ.31,180 ஆகவும், 30 ஆண்டுகள் கழித்து இதன் மதிப்பு ரூ.17,140 ஆக இருக்கும் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |