1 கோடி ரூபாயின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் கையில் வைத்திருக்கும் 1 கோடி ரூபாயின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு இருக்கும் என்பதை பார்க்கலாம்.
பணவீக்கம் (Inflation)
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 100 ரூபாயின் மதிப்பு தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என்பதை நாம் எல்லோருக்கும் அறிந்த விடயம் தான்.
தற்போது, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பும் குறைவாக வாய்ப்புள்ளது. இதனை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டும் என்றால் இப்போது இருந்தே அதற்கான திட்டமிடுதலை நாம் முன்னெடுக்க வேண்டும்.
தற்போது நம் கையில் ரூ.1 கோடி இருந்தால் நம் எதிர்காலத்தில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கலாம்.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு குறையும். உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சத்தின் மதிப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்தது.
பணவீக்கம் அதிகரித்து வருவதால் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால், பணத்தின் மதிப்பும் குறைந்துவிடுகிறது.
இந்த மாதிரியான நேரங்களில் நாம் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.
நமது வருமானம் முதலீட்டை விட அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 5 முதல் 6% வரை உள்ளது. இதேபோல் நீண்ட கால பணவீக்க விகிதம் 6 % இருக்கும் என்று கருதலாம்.
அதாவது 6% பணவீக்க விகிதத்தின்படி, தற்போது ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் பொருட்களின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம். எதிர்காலத்தில் ரூ.1 கோடி கொடுத்து வாங்கும் பொருளின் விலை ரூ.1.79 கோடி என மாறலாம்.