Post office திட்டம்: FDஐ முன்கூட்டியே மூடினால் எவ்வளவு பணம் இழக்கப்படும்?
வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் செய்யப்படும் நிலையான வைப்புத்தொகை (FD) பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் வட்டியுடன் பணத்தைப் பெறலாம்.
ஆனால், சில நேரங்களில் முதிர்வு காலத்திற்கு முன்பே சிலருக்கும் பணம் தேவை இருக்கும்.
அப்போது FDயை முன்கூட்டியே முறித்தால், கிடைக்கும் வட்டியில் மாற்றம் ஏற்படும். மேலும், சில வங்கிகள் அபராதம் விதிக்கும்.

உதாரணமாக, 2 ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டியில் FD செய்திருந்தால், 10 மாதங்களுக்குப் பிறகு அதை முறித்தால், 7 சதவீத வட்டி முழுமையாக கிடைக்காது.
வங்கி 10 மாதங்களுக்கான வட்டி விகிதத்தை தனியாக கணக்கீடு செய்யும். மேலும், அதனுடன் முன்கூட்டியே FDஐ முடிப்பதற்கான அபராதமும் விதிக்கப்படும்.
உதாரணமாக, ரூ.5 லட்சத்தை 2 ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டியில் FD செய்து, 10 மாதங்களுக்கு பிறகு FDஐ முறித்தால், வட்டி மற்றும் அபராத விதிமுறைகளுக்கு ஏற்ப கிடைக்கும் தொகை குறையும்.

2 ஆண்டுகள் முழுமையாக பணத்தை வைத்திருந்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.5.72 லட்சம் கிடைக்கும்.
ஆனால், 10 மாதங்களிலேயே FDயை முறித்தால் சுமார் ரூ.5.21 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதனால் சுமார் ரூ.51,000 வரை வித்தியாசம் ஏற்படும்.
மேலும், அவசரமாக பணம் தேவைப்படும் போது FDயை உடனடியாக முறிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சில வங்கிகள் FDயின் அடிப்படையில் கடன் வசதியை வழங்குகின்றன. இதன் மூலம் FDயை தொடர்ந்தபடியே தேவையான பணத்தை பெற முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |