பிரித்தானியர்கள் ராணுவத்தில் சேர மறுத்தால் என்ன ஆகும்?
உலக நாடுகள் பல, மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன.
சுவிட்சர்லாந்து போன்ற நடுநிலை நாடுகள் முதல், உலகப்போர்களுக்காக வரலாற்றில் இடம்பிடித்த ஜேர்மனி போன்ற நாடுகள் வரை, தத்தம் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, பிரித்தானியா தன்னைக் காத்துக்கொள்ள போருக்குத் தயாராகவேண்டும் என கோடையிலேயே அமைச்சர்கள் கூறியிருந்தார்கள்.
ஆக, பிரித்தானியர்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படக்கூடும் என்ற ஒரு நிலை காணப்படுகிறது.
Getty
ராணுவத்தில் சேர மறுத்தால் என்ன ஆகும்?
ஆனால், ராணுவத்தில் சேர விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைக்கவும் வாய்ப்புக் கொடுக்கப்படக்கூடும்.
அப்படி அவர்களுடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், அவர்கள் போருக்கு அனுப்பப்படாமல், மருத்துவப் பணி போன்ற பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படலாம்.
விடயம் என்னவென்றால், தங்கள் நாட்டுக்காக போரிட மறுக்கும் அத்தகையோர் அவமதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறது வரலாறு!
ஆம், முதல் உலகப்போரின்போது, ராணுவத்தில் சேர்ந்து போரிடச் செல்லாத ஆண்களை அவமதிப்பதற்காக, பிரித்தானிய பெண்கள்’The White Feather Campaign' என்னும் ஒரு பிரச்சாரத்தைத் துவக்கினார்களாம்.
ராணுவ சீருடை அணியாத ஆண்களைப் பார்த்து வெள்ளை நிற இற்குகளை அசைத்துக் காட்டுவதுடன், அவர்களுடைய சட்டையில் வெள்ளை நிற இறகு ஒன்றைக் குத்திவைப்பார்களாம் பெண்கள்.
தன் தாய்நாட்டைக் காக்க ராணுவத்தில் சேராத அந்த ஆண்களை, கோழைகள் என அவமதிக்கும் வகையில் அப்படி ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்களாம் பிரித்தானிய பெண்கள்.
ஆக, மூன்றாம் உலகப்போர் ஏற்படும் பட்சத்தில், ராணுவத்தில் சேர மறுக்கும் ஆண்கள் பொதுவெளியில் அவமதிக்கப்படும் அபாயம் உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்!
Credit: Vadim Ghirda/AP