மகன்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை இளவரசி டயானா என்ன செய்வார் தெரியுமா?
கிறிஸ்துமஸ் காலம் என்றாலே பிரித்தானிய அரண்மனை களைகட்டும். மக்கள் தங்களுக்குப் பிடித்த ராஜ குடும்பத்தினருக்கு ஏராளம் பரிசுப்பொருட்களை அனுப்புவார்கள்.
எல்லா பரிசுப்பொருட்களையும் அனுமதிக்காத இளவரசி டயானா
இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் ஏராளம் பரிசுப்பொருட்களை மக்கள் அனுப்புவதுண்டாம். ஆனால், அப்படி அனுப்பப்படும் எல்லா பரிசுப்பொருட்களையும் தன் மகன்களுக்குக் கொடுக்கமாட்டாராம் டயானா.
அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பரிசுகளை மட்டுமே தன் பிள்ளைகளுக்கு அவர் கொடுப்பாராம்.
Image: Tim Graham Photo Library via Getty Images
பரிசுப்பொருட்களை திருப்பி அனுப்பும் டயானா
சில நேரங்களில் யாரிடமிருந்து வருகிறது என்றே தெரியாத சில பரிசுகள் அரண்மனையை வந்தடையுமாம். அவற்றை டயானா திருப்பி அனுப்பிவிடுவார் என்கிறார் அவரது முன்னாள் பாதுகாவலரான Ken Wharfe என்பவர்.
தன் பிள்ளைகள், வாழ்க்கை என்றாலே சொகுசாக, ஆடம்பரமாக இருக்கும் என்று எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, அவர்களை தொண்டுநிறுவனங்களுக்கு அழைத்துச் செல்வார் டயானா என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.
அதேபோல, தன் பிள்ளைகளுக்கு வரும் சில பரிசுப்பொருட்களை அந்த தொண்டுநிறுவனங்களுக்குக் கொடுத்துவிடுவாராம் டயானா.
தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் அளவில்லாமல் கிடைக்கும் பிள்ளைகள் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளின் எண்ணிக்கையை டயானா கட்டுப்படுத்துவதுண்டு என்கிறார் Ken Wharfe.
Image: Tim Graham Photo Library via Getty Images