வாட்ஸ் அப் Block-ஐ எளிதாக கண்டுபிடிக்க 4 வழிகள்! புகைப்படங்கள்
வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை ப்ளாக் செய்ய முடியும்.
நீங்கள் யாரேனும் ஒருவரை பிளாக் செய்தாலோ? அல்லது உங்களை யாரேனும் ஒருவர் பிளாக் செய்தாலோ அதை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
ஓன்லைன்
ஒருவர் கடைசியாக ஆன்லைனில் எப்போது இருந்தார் என்பதை, தொடர்பில் இருப்பவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்றால் அந்த தகவல் உங்களுக்கு காட்டாது. அதேநேரத்தில் இதை மட்டும் வைத்து ஒருவர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்பதை சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஆன்லைனில் இருக்கும் தகவலை ஒருவர் வாட்ஸ்அப்பில் ஆப் செய்து வைத்துக் கொள்ளும் ஆப்சனும் இருக்கிறது.
புரொபைல் பிக்சர்
உங்களுடைய வாட்ஸ் ஆப்பில் ஒருவரின் புரொபைல் பிக்சர் காண்பிக்கப்படவில்லை என்றால், நீங்கள் அவர்களால் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். புதிய நபர் என்றால், அவர் உங்களின் எண்ணை சேமிக்கும் வரை புரோபைல் பிக்சர் காட்டாது.
மெசேஜ்
நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்டவர்களுக்கு செய்தி அனுப்பும்போது அது சென்று சேராது.
வாட்ஸ் அப் குரூப்
நீங்கள் புதிய குழு ஒன்றை உருவாக்க முயற்சி செய்யுங்கள். அந்தக் குழுவில் அவரை உங்களால் சேர்க்க முடியவில்லை என்றால், அந்த நபர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.