ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் சாட்களை மறைப்பது எப்படி? எளிய ட்ரிக்ஸ்
நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கென்று சில பிரைவசி சாட்கள் இருக்கும். அவற்றை வேறு யாரும் பார்க்க கூடாது என நினைப்போம்.
சரி, ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் சாட்களை மறைப்பது எப்படி என பார்ப்போம்.
நீங்கள் மறைக்க விரும்பும் தனிநபர் அல்லது குரூப் சாட்டை Archive செய்ய நீங்கள் மறைக்க விரும்பும் chat-ஐ சில வினாடிகள் அழுத்தி பிடிக்கவும். பின் குறிப்பிட்ட chat-ஐ லிஸ்ட்டில் இருந்து மறைக்க ஸ்கிரீனின் மேற்புறத்தில் உள்ள காட்டப்படும் ஆப்ஷன்களில் Archive ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
நீங்கள் அனைத்து chat-களையும் Archive செய்ய விரும்பினால் Settings சென்று Chats மற்றும் Chat history செல்ல வேண்டும். பின் Archive all chats என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
Archived செய்யப்பட்ட தனிநபர் அல்லது குரூப் சாட்களை பார்க்க, CHATS ஸ்கிரீனின் மேலே ஸ்க்ரோல் செய்யவும். பின் Archived என்பதை டேப் செய்யவும்.
Archived-க்கு அடுத்துள்ள எண், எத்தனை Archived செய்யப்பட்ட தனிநபர் அல்லது குரூப் சாட்களில் நீங்கள் படிக்காத மெசேஜ்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது.