Whatsappல் உங்களுக்கு அனுப்பிய மெசேஜை நீங்க பாக்குறதுக்கு முன்னாடியே Delete பண்ணிட்டாங்களா? அதை மீண்டும் பார்ப்பது எப்படி?
வாட்ஸ் அப் பயன்பாடு என்பது இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாது என்றாகிவிட்டது. வாட்ஸ் அப்பில் நமக்கு அதிகம் தெரியாத பல விடயங்கள் இருக்கவே செய்கிறது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நமக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பினார் என வைத்து கொள்வோம், பின்னர் சிறிது நேரத்தில் அதை டெலிட் செய்துவிடுகிறார்கள்,
அந்த அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பார்ப்பது எப்படி தெரியுமா?
வாட்ஸ் அப்பில் டெலிட் செய்ய மெசேஜ்களை திரும்ப பெற முடியாது, ஆனால் வேறொரு செயலிகள் மூலம் நீக்கப்பட்ட தகவல்களை காண முடியும்.
இதற்கு ப்ளே ஸ்டோரில் சென்று whatsdelete view deleted messages என தேடினால் பல ஆப்ஸ்கள் வரும், அதில் ஒன்றை டவுன்லோட் செய்துவிட்டால் போதும்.
இதன்பின்னர் நீங்கள் புதிதாக இன்ஸ்டால் செய்த அந்த ஆப் மூலம், உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பி டெலிட் செய்தார்களோ அந்த மெசேஜ்களை காணலாம்.