Whatsappல் வரும் புகைப்படங்கள் போன் கேலரியில் தோன்றுவதை தடுப்பது எப்படி? எளிதான ட்ரிக்ஸ்
வாட்ஸ் அப் செயலியின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது.
குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், இந்த ஆப் ஃபைல்கள், டாக்கியுமென்ட், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
அவ்வாறு நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப் மூலம் உங்கள் தொலைபேசியின் கேலரியில் தானாகவே சேமிக்கப்படும். இதன் காரணமாக உங்கள் மொபைல் எம்பி உங்களுக்கு தெரியாமலேயே காலியாகிவிடும்.
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்கும் முறை
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்ஸ்அப்பைத் ஓபன் செய்து அதில் செட்டிங்கிற்குச் செல்லவும்.
அதில் ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது மீடியா பைல்களை டவுன்லோட் செய்யும் மூன்று விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள். அதாவது 'மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் போது', 'வைஃபை உடன் இணைக்கும் போது', 'ரோமிங் செய்யும் போது'.
அனைத்து விருப்பதிலும் மீடியா- படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களுக்கான தானியங்கு பதிவிறக்கங்களை டிசேபிள் செய்யவும்.
இப்போது, உங்கள் வாட்ஸ்ஆப் கான்டேக்ட்டில் உள்ள ஒரு யூசர் உங்களுக்கு ஏதேனும் புகைப்படம்/ஆடியோ/வீடியோவை போன்றவற்றை பகிரும்போது, அதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் மேனுவலாக மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்.
சரி, உங்கள் தொலைபேசியின் கேலரியில் இந்த புகைப்படங்கள் தோன்றுவதை நீங்கள் விரும்பவில்லை என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்அப்பில் சாட் விண்டோவை திறக்க வேண்டும்.
அதில் செட்டிங்கிற்கு சென்று சாட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
மீடியா விசிபிலிட்டியை பார்த்து அதை ஆப் செய்ய வேண்டும்.