கிரிப்டோ கரன்சியில் முதலீடு! வாட்ஸ் அப்பில் வந்த தகவலால் நடந்த ஒரு பலே மோசடி
வாட்ஸ் அப் குழுவில் தகவல் அனுப்பி கிரிப்டோ கரன்சி முதலீடு செய்வதாக ரூ.30 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் சைபர் கிரைம் பொலிசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், எனது செல்போனில் வாட்ஸ் அப் குழுவின் மூலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற தகவல் வந்தது.
அந்த தகவலை நம்பி அருண் என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.30 ஆயிரம் ஒன்லைன் மூலமாக அனுப்பினேன். ஆனால் என்னிடம் கூறியதை போல எந்தவொரு தொகையும் திருப்பி கொடுக்கப்படவில்லை.
எனவே கிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக மோசடி செய்த எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு சசிமோகன் சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வங்கி கணக்கு முடக்கம் இந்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கி ரூ.30 ஆயிரத்தை திரும்ப பெற்று செல்லதுரையிடம் பொலிசார் ஒப்படைத்தனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.