WhatsApp குழு அழைப்பின் போது இதை இனி செய்யலாம்! பலரும் எதிர்பார்த்த அப்டேட்
வாட்ஸ் அப் மீண்டும் அசத்தலான அப்டேட்டை தங்கள் பயனர்களுக்கு கொடுத்துள்ளது.
சமீபத்தில் வழங்கப்பட்ட அப்டேட்டில் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும் இனி ஒரே நேரத்தில் 32 பேர் வாட்ஸ் அப் குழு அழைப்புகளில் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் கூறியிருந்தது.
இந்நிலையில் வாட்ஸ் அப் குழு அழைப்புகள் தொடர்பிலேயே புதிய அப்டேட் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது குழு அழைப்பின் போது குறிப்பிட்ட நபரை Mute செய்யும் வகையிலும், குறிப்பிட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் மேம்படுத்தி, ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது.
அந்த நபரை யார் muteல் போட்டாலும், அவை குழுவில் உள்ள வேறு யாருக்கும் கேட்கப்படாது. இதைக் குறிக்க, mute செய்யப்பட்ட நபரின் பெயருக்குப் பக்கத்தில் ஒரு ஐகான் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.