Whatsapp chatகளை டெலிட் செய்ய வேணாம்! யாரும் பார்க்காமல் மறைக்க எளிய வழி இருக்கு
சமூகவலைதளங்களில் முதன்மையானதாக இருப்பது வாட்ஸ் அப்!
வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் அம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது.
பலரும் வாட்ஸ்அப் அரட்டைகளை பிறர் யாரும் பார்த்துவிடக் கூடாது என டெலிட் செய்து விடுவார்கள். அதுவே திரும்ப தேவை எனும் போது இருக்காது.
வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட அரட்டை மற்றும் குழு அரட்டைகளை மறைக்க வாட்ஸ்அப்பின் Archive Chat அம்சத்தை பயன்படுத்தலாம்.
சேட்களை மறைப்பது எப்படி?
வாட்ஸ்அப் தளத்துக்கு சென்று நீங்கள் மறைக்க விரும்பும் தனிப்பட்ட அல்லது குழு சேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது நீக்கு, முடக்கு மற்றும் காப்பக விவரம் உள்ளிட்ட சில விருப்பங்களை காண்பீர்கள்.
இதில் காப்பக தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.
தங்கள் சேட்டிங் பட்டியலின் மேல் காப்பக பட்டன் தோன்றும் இதில் அனைத்தும் மறைக்க என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் சேட்டிங்கை மீட்டெடுக்கும் வழி
வாட்ஸ்அப்பில் காப்பக அரட்டை பகுதியை திறக்க வேண்டும்.
தற்போது நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் அரட்டை தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியாக காப்பக பட்டனின் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள unarchive என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.