Whatsapp-ல் வரவிருக்கும் புதிய அப்டேட்: இனி மொபைல் நம்பர் தேவையில்லையா?
வாட்ஸ் அப் செயலியில் இனி மொபைல் நம்பர் இல்லாமல், User nameயை முறையை பயன்படுத்தி கொள்ளும் வசதி, வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் செயலியின் அப்டேட்டுகள்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் செயலியில், புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மெசேஸ் திருத்தம் செய்யும் வசதி போன்ற பயனுள்ள அப்டேட்டுகளை மெட்டா வழங்கி வருகிறது.
@meta
அந்த வகையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியில் புதிதாக ஒரு வசதி வரவுள்ளது.
புதிய அப்டேட்
தற்போது மெட்டா வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில், User name முறை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான, பயனர் பெயர்களை அமைப்பதற்காக புதிய அம்சம் விரைவில் வரவிருக்கிறது.
@getty images
அதாவது Whatsapp Username மூலமாக ஒரு தனி நபர், வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காண அனுமதிக்கும் அம்சத்தில், வாட்ஸ் அப் செயல்பட உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.
இதன் மூலம் வழக்கமாக பயன்படுத்தும் மொபைல் எண் இல்லாமல், இனி Username-யை பயன்படுத்தி வாட்சாப் கணக்குகளை பயன்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.