Whatsappல் புகைப்படங்களை அனுப்புவீர்களா? அப்போ இது உங்களுக்கு தான்
வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும்.
அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். அவ்வாறு டாக்குமெண்டாக அனுப்பும்போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும். அதை டவுன்லோட் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும்.
இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்பலாம்.
இதன்மூலம் அந்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். இந்த அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்அப்பில் லிங்க்கை பகிரும்போதும் இந்த ப்ரிவீவ் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.