Whatsappல் பலரும் எதிர்பார்த்த சூப்பர் அப்டேட்! இனி உங்க பழைய மெசேஜ்களை இப்படி செய்யமுடியும்
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எப்போதும் ஏறுமுகத்திலேயே இருக்கும். ஏனெனில் அது அந்த அளவுக்கு பயனாளர்கள் விரும்பும் மெசேஜ் செயலியாக உள்ளது.
வாட்ஸ் அப் அதன் பயனர்களுக்காகப் பல புதிய அம்சங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்த வரிசையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பட்டியலில் இருந்த Delete For Everyone அம்சத்தை இப்போது மேம்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சோதனை முறை நடந்து வருகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் இனி பயனர்கள் முன்பை விட அதிக நாட்கள் பழமையான மெசேஜ்களை முற்றிலுமாக டெலீட் செய்யும் வாய்ப்பை கொடுக்கிறது.
வாட்ஸ்அப்பிற்கான Delete For Everyone என்ற மெசேஜ்களை நீக்கும் அம்சம் ஆரம்பத்தில் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இனி 3 மாதங்களுக்கு முன்பு கடந்த மெசேஜ்களை கூட டெலீட் செய்ய முடியும். இப்படி இதன் கால வரையறை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பை தொடர்ந்து டிராக்கிங் செய்யும் WABetaInfo டிராக்கர், வாட்ஸ்அப் அண்ட்ராய்டு பீட்டா v2.21.23.1 வெர்ஷனில் இந்த அம்சங்கள் காணப்படுவதாக விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் எது எப்போதில் இருந்து நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.