Whatsapp பயன்படுத்துபவரா? காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்
வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு ஒரு அசத்தலான புதிய அப்டேட் கிடைக்கவுள்ளது.
உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது புது அப்டேட்களை விடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் நாம் வைக்கும் புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ், மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்காக சில அப்டேட்களை தரவுள்ளது வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான மெட்டா.
அதன்படி 'வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.2149.1-வில் யார் நமது புரொபைல் போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்பதை நமக்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ள 'My Contacts Except...' என்கிற ஆப்ஷன் வரவுள்ளது.
இந்த புது அப்டேட் வாட்ஸ்அப்பை கணினியில் பயன்படுத்துவோருக்கு தற்போது வரவுள்ளது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் மற்றும் வெப் யூசர்களுக்கு வரவுள்ள அப்டேட் மூலம் பயனாளர்களின் தகவல்கள் முழுவதுமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.