இதுவரை Whatsappல் செய்யமுடியாததை இனி செய்யலாம்! வெளியாகவுள்ள சூப்பரான புதிய அப்டேட்கள் இவைதான்
வாட்ஸ்அப் ஆப்பை 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தளவுக்கு இந்த செயலியானது உலகளவில் மிக பிரபலமாக உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிளாட்பார்மை மேலும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்ற, அவ்வப்போது புதிய அப்டேட்ஸ்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு அம்சங்களையும் வரவுள்ள அப்டேட்ஸ்களில் வெளியிட உள்ளது வாட்ஸ் அப்.
ஹை - குவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
வாட்ஸ்அப்பில் தற்போது ஹை - குவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வாட்ஸ்அப் கம்ப்ரஸ் அம்சத்தில் அனுப்புவதால் அதன் குவாலிட்டியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் தற்போது யூசர்களுக்கு பெஸ்ட் குவாலிட்டி (Best Quality), டேட்டா சேவர் (Data Saver) உள்ளிட்ட அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் யூசர்கள் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும்.
Disappearing messages அம்சத்தில் மேம்பாடு அப்டேட்
வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய காணாமல் போகும் செய்தி (Disappearing messages) அம்சத்தை தொடந்து 'ஒருமுறை பார்க்கவும்' (View once) என்பதை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த அம்சத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை தானாகவே நீக்குகிறது. இந்த நிலையில் எதிர்கால அப்டேட்டில் அனைத்து புதிய உரையாடல்களுக்கும் யூசர்கள் பயனர்கள் காணாமல் போகும் செய்திகளை தானாகவே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
காண்டாக்ட் பிரைவசி
வாட்ஸ்அப் ஏற்கனவே யூசர்கள் தங்கள் ப்ரொபைல் புகைப்படம், தனிப்பட்ட விவரம், ஸ்டேட்டஸ், Last Seen ஆகியவற்றை ‘My contacts’, ‘Everyone’ and ‘Nobody’ என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொள்ளும் அம்சம் உள்ளது. தற்போது வரவுள்ள அப்டேட்டில் ப்ரொபைல் புகைப்படம், தனிப்பட்ட விவரம், ஸ்டேட்டஸ், Last Seen ஆகியவற்றை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் காட்டும் வகையில் கொண்டு வர உள்ளது. இதற்காக ‘My contacts except’ என்ற புதிய அம்சத்தை இணைக்க உள்ளனர்.
புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் புதிய வசதி
புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவாக வெளியிட உள்ளது. இதன்மூலம் நீங்கள் ஒரு படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்ப முயற்சிக்கும் போது அப்டேட்டில் வர உள்ள புதிய பொத்தானை பயன்படுத்தி ஸ்டிக்கர்களாக படங்களை அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.