Whatsapp Status-ல் வரும் வீடியோ, புகைப்படங்களை டவுன்லோட் செய்வது எப்படி?
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.
வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் மட்டும் இல்லாமல், ஸ்டேட்டஸில் ரசிக்கக்கூடிய படங்கள், வீடியோக்களை நமது நண்பர்கள் பதிவிட்டு அசத்துவார்கள். அவற்றில் சில நாம் போனில் சேமித்து வைத்து பகிரவும் விரும்புவோம்.
ஒருமுறை நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டசை பார்த்தாலே, அந்த படம், வீடியோ உங்கள் செல்பேசியில் மறைவான ஒரு இடத்தில் சேமிக்கப்படும். அதனை நாம் எடுத்து வேறொரு இடத்தில் சேமித்து வைத்து விட்டால், பின்னர் எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கலாம், பகிரலாம். வேறொரு இடத்தில் மாற்றவில்லை என்றால் அந்த கோப்பு 24 மணிநேரத்தில் தானாக நீக்கப்படும்.
அந்த ஸ்டேட்டஸ் கோப்புகளை தேடுவது எப்படி?
1. ஸ்மார்ட்போனில் File Manager பகுதிக்கு செல்லுங்கள்
2. அதில் வாட்ஸ் அப் என்ற கோப்பையை திறக்கவும்.
3.பின்னர் அதில் உள்ள மீடியாவை திறக்கவும்.
4.அதற்குள் ஸ்டேட்டஸ் என்ற கோப்பை மங்கலாக இருக்கும், அதனை திறந்தால் நீங்கள் ஸ்டேட்டஸில் பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கும்.
5. Statuses என்ற கோப்புறை தெரியவில்லை என்றால் மேலே வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகள் மீது தட்டவும். அதில் Show hidden files என்பதை தேர்வு செய்யவும், தற்போது அந்த கோப்புறையை நீங்கள் காணலாம்.
6. இப்போது Back வந்து பார்த்தால் statuses என்ற கோப்புறை தெரியும், அதனை திறந்தால் நீங்கள் ஸ்டேட்ஸில் பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதில் இருக்கும்.
இனி அந்த ஸ்டேடஸை நாம் எப்போதும் வேண்டுமானலும் பார்த்து கொள்ள முடியும்.