Whatsappல் உங்கள் Profile போட்டோவை குறிப்பிட்ட நபர்களிடம் மட்டும் மறைக்கனுமா? வருகிறது புதிய சூப்பர் அப்டேட்
வாட்ஸ் அப் செயலியை உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ்-அப்பில் புரோஃபைல் படத்தை (Display Picture) மறைக்கும் புதிய அம்சத்தை கொண்டுவருவதற்கான சோதனையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாம்.
பயனர்களின் பிரைவசியை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளதாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் ‘யார்?’ தங்களது புரோஃபைல் படத்தை பார்க்கலாம் என்பதை நிறுவிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாட்ஸ்-அப் செயலியில் புரோஃபைல் படத்தை மறைக்கும் ஆப்ஷன்கள் உள்ளன. அது Nobody மற்றும் My Contacts என மட்டுமே உள்ளது.
இந்த புதிய அம்சம் வாட்ஸ்-அப்பில் வந்தால் ‘My contacts except’ என்ற ஆப்ஷன் வருமாம்.
அதன் மூலம் யார் பயனரின் புரோஃபைல் படத்தை பார்க்கலாம் என்பதை பயனர்கள் நிறுவிக் கொள்ள முடியுமாம். மேலும் ‘Last Seen’ ஆப்ஷனையும் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.