Whatsapp இனி இந்த Smart phoneகளில் வேலை செய்யாது! வெளிவந்த முக்கிய தகவல்
உலகளவில் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது வாட்ஸ் அப். இந்த நிலையில் வாட்ஸ்அப் இனி ஆப்பிள் சாம்சங் உள்ளிட்ட சில நிறுவனங்களின் சாதனங்களில் வேலை செய்யாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்கு பிறகு உங்கள் சாதனம் மேம்படுத்தவில்லை என்றால் வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட்போனில் இயங்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் மூலம் செய்திகளை பெறவும் அனுப்பவும் முடியாது. புதிய தொலைபேசியை வாங்குவதற்கான நேரம் இதுவாகும். அல்லது சாஃப்ட்வேர் புதுப்பிக்க தகுதியானதாக இருந்தால் அதை உடனடியாக செய்து கொள்ளவும்.
எந்தெந்த சாதனங்களில் வாட்ஸ் அப் செயல்படாது?
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட் 2, கேலக்ஸி எஸ்2, கேலக்ஸி எஸ்3 மினி, கேலக்ஸி எக்ஸ்கவர் 2, கேலக்ஸி கவர், கேலக்ஸி ஏஸ்2.
எல்ஜி
எல்ஜி லூசிட் 2, ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்3 2, ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7 டூயல், ஆப்டிமஸ் எல் 7 2, ஆப்டிமஸ் எஃப் 6, ஆப்டிமஸ் எல்4 2 டூயல், ஆப்டிமஸ் எஃப் 3, ஆப்டிமஸ் எல்4 2, ஆப்டிமஸ் எல் 2 2, ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி, 4எக்ஸ் எச்டி, ஆப்டிமஸ் எஃப்3 க்யூ.
ஹூவாய்
ஹூவாய் ஏஸ்சென்ட் ஜி740, ஏஸ்சென்ட் மேட், ஏஸ்சென்ட் டி க்வாட் எக்ஸ் எல், ஏஸ்சென்ட் டி1 க்வாட் எக்ஸ்எல், ஏஸ்சென்ட் பி1 எஸ், ஏஸ்சென்ட் டி2.
சோனி
சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோஎல், எக்ஸ்பீரியா ஆர்க் 5