WhatsApp வாய்ஸ் மெசேஜை transcribe செய்வது எப்படி? எளிதான வழி இதோ
வாட்ஸ்அப்பில் ஒருவர் அனுப்பி வைத்திருக்கும் வாய்ஸ் மெசேஜை நீங்கள் transcribe செய்யும் அம்சம் அந்த செயலில் இல்லை.
ஆனாலும் இது சாத்தியம் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்ஸ்களை டெக்ஸ்ட்டாக மாற்றி கொள்ளலாம்.
வாய்ஸ் மெசேஜை டிரான்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் அந்த மெசேஜில் ஓடியோ வடிவில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அது அப்படியே நமக்கு டெக்ஸ்ட் வடிவில் தெரியும் என்பதே இதன் சிறப்பம்சம்.
வாய்ஸ் மெசேஜ்களை டிரான்ஸ்க்ரைப் செய்து கொள்ளும் அம்சம் WhatsApp-ல் இல்லை என்றாலும், தேர்ட் பார்ட்டி டூல் மூலம் இது சாத்தியம்.
Transcriber for WhatsApp என்ற இந்த டூல் இப்போது பீட்டாவில் வெர்ஷனில் இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று Transcriber for WhatsApp (Early Access) என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் இதை திறந்தால் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை மட்டுமே கண்டறியும் வகையில் இருக்கும். தமிழ் உட்பட வேறு எந்த மொழியையும் இந்த செயலி கண்டறிய செட்டிங்ஸ் சென்று கொடுக்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யலாம்.
வாய்ஸ் மெசேஜ் இருக்கும் வாட்ஸ்அப் சேட்டிற்கு சென்று தேவைப்படும் வாய்ஸ் மெசேஜை லாங் பிரஸ் செய்தால் அது செலக்ட் ஆகும்.
பின்னர் வாட்ஸ்அப்பின் வலது மூலையில் காணப்படும் மூன்று புள்ளிகளை டேப் செய்தால் அதில் ஷேர் என்ற ஆப்ஷன் காட்டும்.
அதையும் டேப் செய்தால் ஸ்கிரீனில் தோன்றும் Transcriber for WhatsApp என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் ஓபன் ஆகும் அந்த குறிப்பிட்ட App காட்டும் இரு ஆப்ஷன்களில் Transcribe என்ற முதல் ஆப்ஷனை தேர்வுசெய்ய வேண்டும்.