இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது! இது உங்களுக்கு தெரியுமா?
பழைய அம்சங்களுடன் இயங்கும் செல்போன்களில் வாட்ஸ்ஆப் சேவைகளை அந்நிறுவனம் நிறுத்துகிறது.
இதன்படி ஆண்ட்ராய்டு போன்களில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐபோன்களில் ஐஓஎஸ் 10 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன்களில் தான் வாட்ஸ்ஆப் இனி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐஓஎஸ் 15 அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் பழைய ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்படுகிறது.
கைஓஎஸில் அதன் வெர்ஷன் 2.5 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன்களில் மட்டுமே வாட்ஸ்ஆப் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 ஆகியவை கைஓஎஸ் 2.5க்கு பிந்தைய வெர்ஷனில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.